இலங்கையில் புது ஆயுதங்களுடன் உலாவும் புதுப்படையால் சர்ச்சை
இலங்கையில் புது ஆயுதங்களுடன் உலாவும் புதுப்படையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மீரிகமவில் இருந்து கற்பிட்டி ஊடாக அனுராதபுரம் வரையிலும் நடத்தப்படவிருந்த மோட்டார் சைக்கிள் சவாரி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மக்களின் கடுமையான எதிர்ப்பை எடுத்து, சவாரியின் அடுத்தக்கட்டமான கற்பிட்டியில் இருந்து அனுராதபுரம் வரைக்குமான சவாரி நிறுத்தப்பட்டது.
அதற்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விளக்கத்துடன் ஊடக அறிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சவாரியில் பயணித்தோர், பொலிஸார் விதித்திருந்த நிபந்தனைகளை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்து.
இந்நிலையில், படத்தில் உள்ளவாறு மோட்டார் சைக்கிள் உலாவுகின்றது. அந்தப் படம் எவ்விடத்தில் வைத்து பிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. என்றாலும், WP (மேல் மாகாணம்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.