இன்ஸ்டாகிராமில் விரைவில் வரப்போகும் புதிய வசதி
பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா தற்போது இன்ஸ்டாகிராமிற்கு புதிய அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்ற நிலையில் இன்ஸ்டாகிராம் உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது.
பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா அதன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு செயலிக்கும் அதன் தேவைக்கேற்ப புதுப்புது அப்டேட்களையும் வழங்கி வருகிறது. இதற்கமைய இன்ஸ்டாகிராமின் கமெண்ட் பகுதியில் டிஸ்லைக் எனும் புதிய அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.