எருமை மாடுகளால் அயலவர்களுக்கு தொந்தரவு; ஆப்பு வைத்த அதிகாரிகள்!
மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரி மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் அங்கு சென்று இடத்தில் பரிசோதனை மேற்கொண்டனர்.

அயல் வீட்டாருக்கு தொந்தரவு
இதன் போது பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்து வந்த இடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதோரு எருமை வளர்த்த நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அயல் வீட்டாருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களும் தொந்தரவுகளும் தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்துப் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.