நாட்டில் எரிவாயு கசிவைக் கண்டறியும் புதிய சாதனம்
கடந்த சில நாட்களாக நாட்டில் எரிவாயு சிலண்டரின் வெடிப்பு அதிகம் இடம்பெற்று வருகின்றன.
இதன் காரணமாக நாட்டில் பல உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது எரிவாயு கசிவு ஏற்பட்டால் முன்கூட்டியே கண்டறியும் சாதனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு ' லைஃப்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சாதனமே நாட்டின் முதல் எரிவாயு கசிவை கணடறியும் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது.
எபிக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு பிரிவின் திட்டத்திற்கு பொறுப்பான தலைமை பொறியியலாளர் சானக தென்னகோன் தெரிவிக்கையில்,
'லைஃப்' சாதமானது தீப்பிடிக்கும் எந்தவொரு விடயத்திற்கு செயற்படும். மேலும் இதனை இணையத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.
இதன் காரணமாக விபத்து ஒன்று ஏற்பட்டால் அது தொடர்பில் கைபேசிக்கு எச்சரிக்கை தகவல் கிடைக்கும்.
இது வாயு, வெப்பநிலை மற்றும் புகை போன்றவற்றை உணரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.