காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; அக்காவாக மாறிய மனைவி ; யாழில் சிக்கிய சந்தேகநபர்களிடம் வெளியான தகவல்

Jaffna Nuwara Eliya Sri Lanka Police Investigation Crime Murder
By Vironika Jun 25, 2026 01:31 AM GMT
Report

தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்கான நேற்றிரவு (24) நுவரெலியா பொலிஸ்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

கடந்த ஜூன் 17 ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; அக்காவாக மாறிய மனைவி ; யாழில் சிக்கிய சந்தேகநபர்களிடம் வெளியான தகவல் | New Details Emerge From Suspects In Jaffna

சம்பவத்தின் பின்னணி

அவரது காதலன், சடலத்தை காருக்குள் வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்ததுடன், அவர் சடலத்தை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவி காணொளிகளிலும் பதிவாகியிருந்தது.

 7 நாட்களாக சந்தேகநபரைத் தேடுவதற்காக, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், சந்தேகநபர் வெள்ளவத்தை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இந்த தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட யாழ்ப்பாண பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர் பயணித்த பேருந்தை சாவகச்சேரி, கைதடி பகுதியில் மறித்து, சந்தேகநபரையும் அவரது மனைவியையும் குழந்தையுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்படும்போது சந்தேகநபர் தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண்ணைப் போல போலியாக வேடமிட்டிருந்தார். சந்தேகநபர் அடிக்கடி பயன்படுத்தும் போலி தலைமுடியும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

தமிழர் பகுதியில் இளம் வியாபாரி செய்த மோசமான செயல் ; சிக்கவைத்த இரகசிய தகவல்

தமிழர் பகுதியில் இளம் வியாபாரி செய்த மோசமான செயல் ; சிக்கவைத்த இரகசிய தகவல்

அவர்கள் யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 தாம் உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்ததாகவும், இதனால் அச்சமடைந்து சடலத்தை காரில் ஏற்றி தெல்தெனியவுக்குக் கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், பிரேத பரிசோதனை அறிக்கைகள் இது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், அவரிடமிருந்து தாம் பணம் பெற்றிருந்தாலும், அது ஒன்றரை கோடி ரூபாய் அல்லவெனவும் அவர் கூறுகிறார்.

தம்மால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு, தான் அந்த நபரின் "மூத்த சகோதரி" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த மோசடிகளுக்கு உதவி செய்ததாக மனைவி தெரிவித்துள்ளார். தமக்குள்ள மூன்று பிள்ளைகளில் இருவரை கடந்த 21 ஆம் திகதி நாரம்மலவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.

தகாத படம் பார்த்து 9 மாத குழந்தையை வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ; மது போதையில் சம்பவம்

தகாத படம் பார்த்து 9 மாத குழந்தையை வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ; மது போதையில் சம்பவம்

சந்தேகநபருக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

 மரணத்தை ஏற்படுத்திய 16 ஆம் திகதி மாலை, பிரதான சந்தேகநபர் சடலம் இருந்த அதே காரில் குண்டசாலையில் உள்ள இந்த ஊழியரின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், சந்தேகநபரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் அதே காரில் அழைத்து வந்து, பிரதேச சபை ஊழியரின் வீட்டில் இரவு தங்கியிருந்துள்ளனர்.

மறுநாள் சடலத்தைத் தெல்தெனியவுக்குக் கொண்டு செல்லும்போது, பிரதேச சபை ஊழியர் மோட்டார் சைக்கிளில் காருக்குப் பின்னால் சென்றுள்ளார். சடலத்தை வீசிய பிறகு, சந்தேகநபரை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் இந்த நபர்களை மாத்தளையில் உள்ள சந்தேகநபரின் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அவர் உதவியுள்ளார். சந்தேகநபர் இந்த ஊழியரின் மனைவியிடமும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக அவர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம் ; அதிரடி காட்டிய வட மாகாண ஆளுநர் ; நாமல் கடும் கண்டனம்

சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம் ; அதிரடி காட்டிய வட மாகாண ஆளுநர் ; நாமல் கடும் கண்டனம்

பொலிஸ் விசாரணைகளின்படி, பிரதான சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட, திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றும் பெரும் மோசடிக்காரர் ஆவார்.

உயிரிழந்த பிசியோதெரபிஸ்டை அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றபோதுதான் அவர் சந்தித்துள்ளார். சந்தேகநபர் பெண்களை ஏமாற்றிப் பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

அவர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பெண்களை ஏமாற்றிப் பெற்ற மொத்தப் பணம் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

பொசன் காலப்பகுதியில் இந்த வாகனங்களுக்கு தடை ; கடும் நடவடிக்கை நிச்சயம்

பொசன் காலப்பகுதியில் இந்த வாகனங்களுக்கு தடை ; கடும் நடவடிக்கை நிச்சயம்

அவர் கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளதுடன், அங்கு பணியாற்றிய இளம் பெண்ணிடமும் 10 இலட்சம் ரூபாவை அபகரிக்கத் திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பிரதான சந்தேகநபரும், அவரது மனைவியும் மேலதிக விசாரணைக்காக தற்போது நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US