தகாத படம் பார்த்து 9 மாத குழந்தையை வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ; மது போதையில் சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இரவு தன் தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த 9 மாதக் பெண் குழந்தையை, 12 வயது சிறுவன் ஒருவன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனை
குலரிஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை குழந்தை காணாமல் போனதைத் தொடர்ந்து தேடியபோது, வீட்டின் அருகே உள்ள ஒரு வயல்வெளியில் குழந்தை ரத்தக் காயங்களுடன், கடுமையான வலியால் துடித்துக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அந்தப் பாப்பா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவப் பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சண்டிகரிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்பு வந்திருந்த குழந்தையின் 12 வயது உறவினரான சிறுவனைப் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் அச்சிறுவன், தான் அன்று இரவு மது அருந்திவிட்டு, மொபைல் போனில் ஆபாசப் படம் பார்த்த பிறகு இக்கொடூரத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.
அவனது மொபைலைச் சோதித்தபோது, 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும், 100-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளத் தேடல்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.