கராப்பிட்டிய வைத்தியசாலையில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் துரித அன்டிஜென் பரிசோதனைகளில் 24 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை காலி கராப்பிட்டிய வைத்திய சாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார்.
கடந்த 2ஆம் திகதி மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் 399 துரித அன்டிஜென் சோதனைகள் மேற்கொள் ளப்பட்டதில் 12 பேருக்கு கோவிட் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதோடு 92 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட தாகவும் அவர்களில் 12 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் , கடந்த 24 மணித்தியாலங்களில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கோவிட் தொற்று காரணமாக இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 20 புதிய கொவிட் நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாகவும், தற்போது 62 கோவிட் நோயாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.