கணவருடன் விடுதி அறையில் தங்கியிருந்த புதுப்பெண் நேர்ந்த கதி ; CCTV காணொளியில் காத்திருந்த ஷாக்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில், 28 வயதான புதுப்பெண் ஒருவர் அறைக்கு வெளியே திடீரென மயங்கி விழ்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 4 மாதங்களே ஆன முஸ் கான் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

CCTV காணொளி காட்சிகள்
இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது அவர் தனது கணவர் நிலேஷ் என்பவருடன் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான 47 வினாடிகள் கொண்ட CCTV காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
அதில், விடுதியின் பாதையில் கணவர் உட்பட இருவர் முன்னதாக அறைக்குள் செல்ல, அவர்களுக்குப் பின்னால் வரும் முஸ் கான் அறையின் நுழைவாயிலிலேயே திடீரென மயங்கி விழுகிறார்.
உடனடியாக கணவர் அவரை தூக்கிக்கொண்டு அறைக்குள் செல்வது அதில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தக் கடத்தல் மற்றும் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.