வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வது குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு முன்னர் திகதி மற்றும் நேரம் ஒதுக்கும் முறைமை இம்மாதத்துடன் நிறைவுக்கு கொண்டு வரப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுசீட்டு பெற்றுக் கொள்வதற்கு கடந்த தினங்களில் அதிக கேள்வி எழுந்துள்ளது. அதனால் இம்மாதம் முழுவதும் திகதி மற்றும் நேரம் விண்ணப்பதாரிகளுக்கு ஏற்கெனவே ஒத்துக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதமளவில் தான் பொது மக்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு திகதி மற்றும் நேரம் ஒதுக்கிக்கொடுக்கப்படும். திகதி, நேரம் முறைமையின் ஊடாக கடந்த நாட்களின் மாத்திரம் ஒரு தினத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை மாத்திரம் சாதாரண முறைமைக்கு அமைய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 4700 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த நாட்களில் மாத்திரம் வழமைக்கு மாறாக கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விண்ணப்பம் பெறுகை காரணமாக குடியவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் சேவை வழங்கலில் அசௌகரியமான நிலை தோற்றம் பெற்றுள்ளது.என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.