விரைவில் இலங்கையை நெருக்கவுள்ள புதிய காற்றழுத்தம்!
இன்றைய தினம் (27-01-2023) காலை தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது நாளை, ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
அதன்பின்னர், அது படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையை அடையக்கூடும்.
['
இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ ஆக இருக்கும் என்று எதிர்வுகூரப்பட்டுள்ளது.
மேலும், கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடலும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.