சமுகவலைதளங்களில் கோட்டாபயவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கடந்த 13 ஆம் திகதி தனது ராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக கூறிய போதும் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் கிடைக்காததால் கோட்டாபயவின் பதவி விலகலை எதிர்பார்த்திருந்த மக்கள் தற்போது தமது எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நெட்டிசைன்கள் படங்கள் காணொளிகள் மூலம் கடிதத்தை எழுதிறார் கிழிக்கிறார் என கோட்டாபயவை கலாய்த்து வருகின்றனர்.
மேற்படி மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக கோட்டபாய ராஜபக்ஷ இன்று (14-07-2022) மாலை மின்னஞ்சல் மூலம் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் ஒன்றை சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக” சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
