நேபாள பேரழிவு; 37 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி மாயமான மலேசிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், 37 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ளார்.
சீன வம்சாவளியைச் சேர்ந்த அந்த நபர், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் இருந்தபோது, ஆகஸ்ட் 26-இல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கினார்.

மலேசியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்
வெள்ளத்தின் காரணமாக சாலைகளும் பாலங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் மற்றும் இணைச் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இதனால் அவரால வெளியுலகை தொடர்புகொள்ள முடியாமல் போனது.
தனித்து விடப்பட்ட அந்த நபர், அனைத்து சவால்களையும் கடந்து கடந்த வியாழக்கிழமை காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்தைத் தாமாகவே தொடர்புகொண்டார்.
அதை தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை மலேசியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தத் தகவலை தொடர்ந்து, நேபாள வெள்ளத்தில் மாயமான மலேசியர்களின் எண்ணிக்கை 55-லிருந்து 54-ஆக குறைந்துள்ளது. 37 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் வியப்பையும் ஆறுதலையும் அளித்துள்ளது.