நேபாளத்தில் பேரழிவு; பெற்றோரை தேடும் சிறுவனின் நெஞ்சை உலுக்கும் காணொளி!
நேபாளத்தில் ஏற்பட்ட மிகக் கொடூரமான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு சிறுவனின் நெஞ்சை உலுக்கும் காணொளி (Video) உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வைரல் வீடியோவில், வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு ஒரு சிறுவன் தனது கைக்குழந்தையான தங்கையைத் தனது முதுகில் சுமந்தபடி நடந்து செல்கிறான்.

வைரல் வீடியோ....
பேரழிவின் போது பெற்றோரிடமிருந்து பிரிந்த இந்த இரண்டு குழந்தைகளும், காயங்களுடன் தங்களது பெற்றோரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளின் முகத்தில் வெள்ளத்தின் போது ஏற்பட்ட கீறல்களும் காயங்களும், பயமும் அப்பட்டமாகத் தெரிகின்றன.
இக்காட்சி ஜப்பானிய அனிமேஷன் படமான 'கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃபிளைஸ்' (Grave of the Fireflies) கதையை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.