4000 ஆண்டுகளாக உருகாத நெய் லிங்கம்; எங்கே உள்ளது தெரியுமா..?
இந்து மத பிரதான தெய்வங்களுள் சிவபெருமானும் ஒன்றாவார். இமயமலை முதல் குமரி எல்லை வரை பல்வேறு சிவன் கோவில்கள் உள்ளன. சில இடங்களில் கல்லில் லிங்கம் அமைந்திருக்கும், இலை இடங்களில் உலோக லிங்கம் இருக்கும்.
இமயமலை அருகே பனியில் உருவான லிங்கத்தை கூட பார்த்திருப்போம். ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் நெய் லிங்கம் பற்றி பரும் அறிந்திக்க வாய்ப்பில்லை.
4000 ஆண்டுகளாக உருகாத நெய் லிங்கம்
4000 ஆண்டுகளுக்கு முன்பு நெய்யால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் லிங்கம் இந்தியாவில் உள்ளது. இந்த நெய்லிங்கம் வெயில், வெப்பம் என்று எந்த காரணத்தாலும் இந்த சிலை உருக்கவில்லையாம். கேரளாவில் இருக்கும் சிவன் கோவில்களிலேயே மிகவும் பிரபலமானது திருச்சூரில் இருக்கும் பகவன் ஸ்ரீ வடக்குநாதர் ஆலயமாகும்.
இது விஷ்ணுவின் அவதாரமான பகவான் பரசுராமரால் உருவாக்கப்பட்ட முதல் ஆலயம் என்று கூறப்படுகிறது. உலகிலேயே 15 ஆவது மிகப்பெரிய கோவிலான இந்த வடக்குநாதர் ஆலயம் 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
பாறை போல் கெட்டியாக இருக்கும் நெய் லிங்கத்தில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ வடக்குநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் இங்கு வந்து வேண்டி சென்றால் நடைபெறாத காரியம் ஒன்றுமில்லை என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
புராணவரலாற்று கதை
புராணவரலாற்று கதை தன் தந்தையை அழித்த மன்னர் குலத்தை கூண்டோடு அழித்த பரசுராமர் தான் செய்த பாவத்தை போக்க பல சிவ ஆலயங்களை எழுப்பினாராம்.
அந்த பட்டியலில் அவர் எழுப்பிய முதல் சிவாலயம் திருச்சூர் ஆலையமாம். புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில், சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பிய பரசுராமர்வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைக்கத் தொடங்கியுள்ளார்.
அதே நேரம் இறைவனின் சிவ கணங்களுள் ஒருவரான சிம்மோதரனிடம் பூவுலகில் தாம் தங்குவதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து வரும்படி சிவபெருமான் கட்டளையிட்டார்.அதன்படி இன்றைய திருச்சூர் வந்த சிம்மோதரன் இங்கே பரசுராமர் சிவாலயம் அமைக்கும் இடம் வந்ததும் மெய்மறந்து அங்கேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில் திரும்பி வராத அவரைக் கண்டு கோபங்கொண்ட சிவபெருமான் தன் காலால் சிம்மோதரனை எட்டி உதைத்தார். அதன் பிறகு அங்கிருந்த தூணில் ஒளி மயமாகி நின்றார்.
12 அடி உயரம், 25 அடி அகலம்
கோவில் பணி நிறைவடையாத நிலையில், இறைவன் கோவிலுக்குள் வந்து விட்டதை உணர்ந்த பரசுராமர், இறைவனின் கோபத்தைக் குறைப்பதற்காக அவரை மீது நெய்யை ஊற்றியுள்ளார்.
பரசுராமர் ஊற்றிய நெய் முழுவதும் இறைவனின் மேலே பட்டு இறைவன் குளிர்ந்து அங்கேயே நெய் லிங்கமாக மாறிவிட்டதாம். அப்படி ஊற்றிய நெய் முழுவதும் சேர்ந்து 12 அடி உயரம், 25 அடி அகலம் எனும் அளவில் கல்பாறை போல மாறியுள்ளது.
அதைத் தான் இன்று வரை இறைவனாக வழிபட்டு வருகின்றனர். அதேவேளை வடக்கே பத்ரிநாத் அமர்நாத் கோவில் லிங்கத்தைப் 'பனிலிங்கம்' என்று அழைப்பது போல், இந்தக் கோவில் இறைவனை 'நெய்லிங்கம்' என சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.
கோடை வெயிலின் தாக்காமோ, மூலவருக்கு காண்பிக்கப்படும் தீபங்களின் வெப்பமோ நெய்யை ஒருபோதும் உருக்கியது இல்லையாம். மேலும் இந்த அபிஷேக நெய், பல்வேறு நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது.
குழந்தைப் பேறு கிட்டும்
குழந்தை இல்லாத தம்பதிகளும் இந்த பிரசாதம் உண்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
எப்படி செல்வது?
கேரளாவின் திருச்சூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தேக்கின்காடு எனப்படும் சிறிய குன்றுப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.