பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த உலக நாடுகள்; தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை!
தொடந்தும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துவருகின்ற நிலையில் உக்ரைன் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மாஸ்கோவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்ற நிலையில் தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்துள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
எனினும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை சமூகநிலையை ஏற்படுத்தும் என பெரும் எதிர்ப்பார்ப்பில் உலக நாடுகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.