ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு! பரிதாபமாக உயிரிழந்த நபர்
சீதுவையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்த நிலையில் அவர்களில் 53 வயதுடைய நபர் ஒருவரே தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்றையதினம் (28-12-2024) மாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரில் சென்ற மர்ம நபர்கள் சிலரால் இந்த துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.