என் குடும்பத்திலும் நீட் தற்கொலை: பிரபல இளம் முன்னனி நடிகையின் அதிர்ச்சி தகவல்
என் குடும்பத்திலும் நீட் தேர்வு தற்கொலை இடம்பெற்றிருப்பதாக முன்னனி நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அந்த போட்டியில் கூறியது, நான் எப்போதும் மாணவர்கள் பக்கம் தான், மாணவர்களின் வலியையும், பிரச்சனைகளையும் நங்கு உணர்கிறேன் என அவர் பேசியுள்ளார்.
மேலும் மருத்துவ படிப்பு என்பது ஒரு கடல் போன்றது, நீட் தேர்வின் போது எதிலிருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. இதனால் மனதளவில் நிச்சியம் பாதிப்பு ஏற்படும். எனவே பெற்றோர்களும் நண்பர்களுமே அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டதால் எனது உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
மேலும் 18 வயது கூட பூர்த்தியாக மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.