வேப்பிலை சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் என உங்களுக்கு தெரியுமா?
நீரிழிவு நோயாளிகள் எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு உணவில் அதிக கட்டுப்பாடு தேவை.
இதனுடன் உடல் செயல்பாடும் இதற்கு மிக அவசியம். நீரிழிவு நோய் இன்னும் சில நோய்களுக்கும் காரணமாகலாம். ஆகையால், இதை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வெண்டியது மிக அவசியமாகும் வேப்பிலை கொண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் முறை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
வேம்பின் இலைகள், பட்டை மற்றும் விதைகள் அனைத்தும் ஆயுர்வேத பண்புகளைக் கொண்டுள்ளன. வேப்பிலை ஆயுர்வேத சிகிச்சை முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ தாவரமாகும். இது ஆயுர்வேதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதன் காரணமாக அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, வேப்பிலையில் கசப்பு சுவை கொண்ட சாறு உள்ளது. இது உடலில் உள்ள இனிப்பு சாற்றை அதாவது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.
வேப்பிலைகள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றன. வேப்பிலையில் சில சிறப்பு சேர்மங்களும் உள்ளன. அவை இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இந்த இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் 5-10 வேம்பு இலைகளை சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் இந்த இலைகளை மருந்து அல்லது இன்சுலின் அளவிற்கு மாற்றாகக் கருத முடியாது. இந்த இலைகளை நீங்கள் ஒரு துணைப் பொருளாக மட்டுமே பயன்படுத்தி நன்மைகளைப் பெறலாம்.