ஹெலிகாப்டரில் சென்ற நெடுந்தீவு பரீட்சை விடைத்தாள்கள்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளன.
சீரற்ற வானிலை மாற்றம் காரணமாக, வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை
இலங்கை விமானப்படையினரால் இன்று (26 ) இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.
அதோடு தீவுக்கான கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


