அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றின் மோசடி

Central Bank of Sri Lanka Crime Sri Lanka Banks
By Sulokshi Apr 06, 2026 09:16 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இடம்பெற்ற உட்புற நிதி மோசடியின் பெறுமதி சுமார் 13.2 பில்லியன் இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றின் மோசடி | Ndb Bank Fraud Shock Deepens To Rs 13 2 Bn Sl

ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகளவான தொகை

இது ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகளவான தொகையாகும். கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) வழங்கிய அறிவிப்பில், இந்த மோசடியானது வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இழந்த நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகள் சட்ட அமலாக்கப் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த மோசடியினால் வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வங்கியின் நாளாந்த செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி உறுதி அளித்துள்ளது.

இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கி NDB வங்கிக்குச் சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது: திட்டமிடப்பட்டிருந்த பண ஈவுத்தொகை (Cash Dividend) வழங்குவதை நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கிளைகளை விரிவாக்குதல் போன்ற அத்தியாவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், பங்குகளை ஈவுத்தொகையாக வழங்கும் (Scrip Dividend) நடைமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசடியுடன் தொடர்புடைய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பிரிவின் ஆவணங்கள் மற்றும் தரவு அணுகல் முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அப்பிரிவு புதிய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, வங்கியின் உட்புறக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேலும் பலப்படுத்துவதற்காக சுயாதீன தடயவியல் தணிக்கை (Forensic Audit) ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது. வங்கியின் மூலதனம் மற்றும் திரவத்தன்மை பலமாக இருப்பதை உறுதி செய்ய இலங்கை மத்திய வங்கி தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி இந்த நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், வங்கியின் திரவத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது.

மத்திய வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி பங்குதாரர்களுக்கு வழங்கப்படவிருந்த பணப்பரிமாற்ற பங்குலாபம் (Cash Dividend) இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், 'ஸ்கிரிப்' பங்குலாபம் (Scrip Dividend) திட்டமிட்டபடி தொடரும். வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேசிய அபிவிருந்தி வங்கி (National Development Bank PLC) கேட்டுக்கொண்டுள்ளது. மேலதிக விளக்கங்களுக்கு அருகிலுள்ள கிளைகளையோ அல்லது 011 744 8850 என்ற துரித அழைப்பிலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US