இந்துக்களின்மிக முக்கியமான நவராத்திரி விழா இன்று ஆரம்பம்; வழிபாட்டின் முக்கியத்துவம்!

festival Hindus Navratri
By Sulokshi Oct 07, 2021 05:03 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 இந்துக்களின் மிக மிக முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரியும்  ஒன்றாகும் . நவராத்திரி, 9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் என்று கொண்டாடப்படும் நவராத்திரியில், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன.

தீமைக்கு எதிரான நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நவரத்திரி பண்டிகை அமைந்துள்ளது. இந்த ஆண்டு, நவராத்திரி அக்டோபர் மாதம் 7 அன்று தொடங்கி, அக்டோபர் 15 அன்று, விஜய தசமி அன்று நிறைவு பெறுகிறது.

இந்துக்களின்மிக முக்கியமான  நவராத்திரி விழா இன்று ஆரம்பம்; வழிபாட்டின் முக்கியத்துவம்! | Navratri Festival Of The Hindus Begins Today

நவராத்திரியின் வரலாறு

இந்து புராணங்கள் கூறியபடி படி, அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அவனை வதம் செய்ய மாபெரும் சக்தி தேவைப்பட்டது. இதற்கான காரணம், படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்துள்ளார்.

எனவே, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது, பராசக்தியை உருவாக்கினார்கள் என  புராணங்கள் கூறுகிறன.

15 நாட்கள் நீண்ட போருக்குப் பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் இந்துக்கள் வழிபடத்துவங்கிய நாட்களே நவராத்திரி விழா  ஆகும்.

அதன்படி முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா தேவிக்கும் , அடுத்துவரும் மூன்று நாட்களும் செல்வத்தை தரும் லக்ஷ்மி தேவிக்கும் கடைசி மூன்று நாட்களும் கல்வித் தெய்வமாகிய சரஸ்வதி தேவிக்கும் கொண்டாடப்படுகின்றது. 10 ஆவது நாளான விஜயதசமி அன்று அம்பாள் மகிக்ஷாசுரனை வதம் செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

அத்துடன் ஆலயங்களிலும் வீடுகளிலும் நவராத்திரி கொலு வைத்து இந்துக்கள் இந்த பண்டிகையை மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள்.

இந்துக்களின்மிக முக்கியமான  நவராத்திரி விழா இன்று ஆரம்பம்; வழிபாட்டின் முக்கியத்துவம்! | Navratri Festival Of The Hindus Begins Today

நவராத்திரி - சுபமுகூர்த்த நேரங்கள்

நாள் 1: நவராத்திரியின் முதல் நாள், பிரதமை அன்று தொடங்கும். இந்த திதி அக்டோபர் 6, மாலை 04:34 தொடங்கி, அக்டோபர் 7 மதியம் 01:46 அன்று முடியும். நைவேத்தியம், மற்றும் பூஜைக்கான நேரம்: அக்டோபர் 7 அன்று காலை 06:17 முதல் 07:07 வரை மற்றும் காலை 11:45 முதல் நண்பகல் 12:32 வரை.

நாள் 2: அக்டோபர் 8 அன்று துவிதியை திதி அக்டோபர் 7, நண்பகல் 01:46 மணிக்குத் துவங்கி மற்றும் அக்டோபர் 8 காலை 10:48 மணிக்கு முடிகிறது.

நாள் 3: அக்டோபர் 8 அன்று திரிதியை திதி காலை 10:48 முதல் அக்டோபர் 9, காலை 07:48 வரை உள்ளது.

நாள் 4: அக்டோபர் 9 அன்று சதுர்த்தி திதி, காலை 07:48 முதல் அக்டோபர் 9, காலை 04:55 வரை உள்ளது.

நாள் 5: அக்டோபர் 10 அன்று பஞ்சமி திதி, காலை 04:55 முதல் அக்டோபர் 11, காலை 02:14 வரை உள்ளது.

நாள் 6: அக்டோபர் 11 அன்று சஷ்டி திதி, காலை 02:14 முதல் அக்டோபர் 11, இரவு 11:50 வரை உள்ளது.

நாள் 7: அக்டோபர் 12 நவராத்திரியின் சப்தமி ஆகும், இது அக்டோபர் 11, அன்று இரவு 11:50 மணிக்கு தொடங்கி அக்டோபர் 12 அன்று இரவு 09:47 வரை நீடிக்கும்.

நாள் 8: மகாஷ்டமி அல்லது மகா துர்காஷ்டமி என்றும் அழைக்கப்படும் அஷ்டமி திதி நவராத்திரியில் தனிச்சிறப்பு வாய்ந்த திதியாகும். இந்த திதி, அக்டோபர் 12 இரவு 09:47 முதல் அக்டோபர் 13 08:07 வரை நீடிக்கும்.

நாள் 9: நவமி திதி அல்லது மகாநவமி என்பது துர்கா தேவி மகிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற நாள். இது அக்டோபர் 13 இரவு 08:57 முதல் அக்டோபர் 14, மாலை 06:52 வரை நீடிக்கும்.

நாள் 10: தசமி திதி அல்லது விஜயதசமி நவராத்திரியின் கடைசி நாள். இது தசரா என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் மகிஷாசுரன் மீது துர்கா தேவியின் வெற்றியை கொண்டாடுகிறது. இது அக்டோபர் 14 மாலை 06:52 மணிக்கு தொடங்கி அக்டோபர் 15 அன்று மாலை 06:02 வரை தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US