குடியுரிமையை விற்கும் குட்டி தீவு ; யார் வேண்டுமானாலும் வாங்கலாம்!

Tourism Passport Dollars World
By Sulokshi Mar 10, 2025 09:34 AM GMT
Report

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வெறும் எட்டு சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான நவ்ரூவின் குடியுரிமையை இப்போது குறைந்தபட்சம் $105,000 ( இந்திய ரூ.91.38 லட்சம்) கொடுத்து யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிக் கொள்ளலாமாம்.

நவ்ரூ தீவின் கடல்மட்ட உயர்வு, புயல் அலைகள் மற்றும் கடலோர அரிப்பு ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, காலநிலை நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு "தங்க பாஸ்போர்ட்" என்ற முயற்சியை நவ்ரூ அரசாங்கம் தொடங்கியுள்ளது.

Nauru sells citizenship

உலகின் மிகவும் மோசமாக காலநிலை

உலகின் மிகவும் மோசமாக காலநிலை பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றான நவ்ரு நாடு உள்ளது. நவ்ரூ தீவில் உள்ள 12,500 பேர் கொண்ட மக்கள்தொகையில் 90 சதவீதத்தை உயர்ந்த நிலங்களுக்கு மாற்றுவதற்கும், புதிய சமூகத்தை உருவாக்குவதற்கும் தேவைப்படும் நிதிக்காக தங்கள் நாட்டின் குடியுரிமையை விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிள்ளைகள் வெளிநாட்டில்; யாழில் தந்தை விபரீத முடிவு

பிள்ளைகள் வெளிநாட்டில்; யாழில் தந்தை விபரீத முடிவு

இந்நிலையில் நவ்ரூ தீவின் கடற்கரையில் வசிக்கும் பலர் நிலத்தை ஏற்கனவே இழந்துவிட்டனர். சிலரது வீடுகள் பெரும் அலைகளில் முழுவதும் மூழ்கிப்போனது.

Nauru sells citizenship

அவர்களிடம் இழக்க இப்போது ஒன்றுமே இல்லை" என நவ்ரூ பிரஜையான , ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் வணிகப் பள்ளியின் ஆராய்ச்சியாளருமான டைரோன் டீயே கூறுகிறார்.

அதேவேளை கடந்த காலங்களில் நவ்ரூ தீவின் தங்க பாஸ்போர்ட் திட்டங்களில் பெரும் ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும், காலநிலை நிதியைப் பெற போராடும் வளரும் நாடுகளுக்கு, இத்தகைய முயற்சிகள் ஒரு சாத்தியமான உயிர்நாடியை வழங்குகின்றன.

பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருடன் நையப்புடைப்பு! தமிழர் பகுதியில் சம்பவம்

பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருடன் நையப்புடைப்பு! தமிழர் பகுதியில் சம்பவம்

89 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகல்

நவ்ரூ தீவின் பாஸ்போர்ட் இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது என இதன் சாதகங்களை பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் நவ்ரூ தீவின் குடியுரிமை விற்பனையானது நவ்ரூ போன்ற சிறிய நாடுகளுக்கு "மிகப்பெரிய" பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

Nauru sells citizenship

இந்த திட்டத்திலிருந்து முதல் ஆண்டில் $5.6 மில்லியன் ஈட்ட முடியும் என நவ்ரூ அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மொத்த அரசாங்க வருவாயில் 19% பங்களிப்பதே இதன் இலக்காகும். கடந்த 1990 ஆண்டின் நடுப்பகுதியில், இதுபோன்று செயல்படுத்தப்பட்ட திட்டம் ஊழலால் பாதிக்கப்பட்டது.

சிறுமி மீது பாலியல் வன்கொடுமை : மைத்துனர் கைது

சிறுமி மீது பாலியல் வன்கொடுமை : மைத்துனர் கைது

முக்கியமாக 2003-ம் ஆண்டு மலேசியாவில் நவ்ரூ பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் இரண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

Nauru sells citizenship

கடந்த காலம் போல் பிரச்சினைகள் ஏதும் நிகழாமல் தடுக்க, அரசாங்கம் கடுமையான சோதனை நடைமுறைகளை உறுதியளித்துள்ளது.

அதேசமயம் இந்த முறை திட்டத்தின் சோதனை கடுமையானதாக இருக்கும் என்றும், ரஷ்யா மற்றும் வட கொரியா உட்பட ஐக்கிய நாடுகள் சபையால் அதிக ஆபத்துக்குரியது என நியமிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நவ்ரூ குடியுரிமை பெறுவது சிரமம் என்றும் தெரிவித்துள்ளது.

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத குழுக்களின் தலைவராக மருத்துவர்!

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத குழுக்களின் தலைவராக மருத்துவர்!

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US