நாடளாவிய ரீதியில் நாளை முதல் மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, தற்போது மீண்டும் தொடரவுள்ளது.

கோரிக்கைகள்
இந்த பணிப்புறக்கணிப்பில் ஒரு பகுதியாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை வெளியில் உள்ள மருந்தகங்களில் வாங்குமாறு பரிந்துரைத்தல், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை வெளியில் உள்ள தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளுமாறு நோயாளிகளுக்குப் அறிவுறுத்துதல் போன்ற செயல்பாடுகளிலிருந்து விலகுவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.