அது என் தவறு... சபையில் சஜித் வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுத்த மஹிந்த!
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அழைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை நன்கு அறிவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சபையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, குறுக்கிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
நான் தான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அது என் தவறு, என சபையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள், முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்னர் எனக்கு அறிக்கப்பட்டதாக சபையில் அறிவித்தார்.