செவ்வந்தியின் தொலைபேசியில் தனது பெயர் ; NPP இலும் ஒருவர் இருக்கின்றார் ; நாமல் வழங்கிய பதில்
செவ்வந்தியின் தொலைபேசியில் உங்களது பெயர் எவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(24) சிரித்தபடியே பதிலளித்துள்ளார் .
செவ்வந்தியின் தொலைபேசியை பரிசோதித்தவர்களிடம்தான் அது பற்றி கேட்க வேண்டும். செவ்வந்தியின் தொலைபேசியை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர் போல்தான் தெரிவிக்கின்றது.

NPP நாமல் ஒருவர் இருக்கின்றார்
அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக் கூறினால் நல்லது என்பதே மேற்படி கேள்விக்கு நாமல் வழங்கிய பதிலாகும்.
மகே ராஜபக்ச (எனது ராஜபக்ச) என பெயரொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதே… என நாமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள்தான் கனவில்கூட வருகின்றனர். அந்த கட்சியிலும் (NPP) நாமல் ஒருவர் இருக்கின்றார், அது அவரா என்பதுகூட தெரியவில்லை.
நாமல் என்ற பெயரை கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம். பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால்தான் எனது என எழுதி சேவ் செய்வார்கள். சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக்கூட இருக்கலாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளாராம்.