IMF உடன்படிக்கையை எதிர்க்கும் தேசிய மக்கள் சக்தி!
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அதற்கான வாக்கெடுப்பை கோர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்பது, மக்கள் மீது வரம்பற்ற வரி விதிப்பது உள்ளிட்ட நாட்டுக்கு கேடு விளைவிக்கும் பல விஷயங்களை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க தேசிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் ஹரிணி அமரசூரிய ஆகியோர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.