பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (15.12.2023) ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், அக்கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் அனைத்து சகோதர கட்சிகளின் தலைவர்கள், கட்சி உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அக்கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நாட்டை முன்கொண்டுசெல்லும் வேலைத்திட்டங்களுக்கு பொதுஜன பெரமுனவின் பங்களிப்பு தொடர்பிலும் இங்கு விடயங்கள் வெளியிடப்படவுள்ளன.