விபத்தில் சிக்கிய இளைஞர்களிடம் போதைப்பொருள்; ஷாக்கான பொலிஸார்
கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 350 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
. கைது செய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காகக் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், இச் சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்