பிக்பாஸ் பற்றி முதல்முறையாக மனம் திறந்த நமீதா மாரிமுத்து!
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 5வது சீசன் போட்டியாளர்களில் ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்தது. அது என்னவென்றால் முதன்முறையாக இந்த சீசனில் திருநங்கை போட்டியாளராக பங்குபெற்றார்..
பிக்பாஸில் திருநங்கையான நமீதா மாரிமுத்து வந்தது அனைவருக்கும் சந்தோஷம் தான். அவரும் நிகழ்ச்சியில் மிகவும் ஈடுபாடுடன் இருந்து வந்தார்.
பிக்பாஸ் வீட்டில் முதல் வரத்தில் இடம்பெற்ற போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை டாஸ்கில் எல்லோரும் போல் அவர் தனது வாழ்க்கை பயணத்தை கூற ஒட்டுமொத்த தமிழக மக்களும் கண்ணீர்விட்டு அழுதார்கள். பின் திடீரென அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், தாமரையுடன் பெரிய சண்டை என்றும் கூறப்பட்டது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நமீதா மாரிமுத்து ரசிகர்களுடன் பேசியுள்ளார். இதன்போது மீண்டும் பிக்பாஸ் செல்வீர்களா என கேட்டதற்கு, போகலாம், போகாமலும் இருக்கலாம் என்றார். தாமரையுடன் சண்டையா என்ற கேள்விக்கு அவர், தாமரை ஒரு நல்ல பெண் தான், சில விஷயங்கள் தெரியவில்லை.
எங்கள் இருவருக்கும் எவ்வித சண்டையும் இல்லை, அவர் வெளியே வந்தால் எங்களது குடும்ப நிகழ்ச்சிகளில் அவரை பாட வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.