12ஆம் திகதி இது தான் நடக்கும் ; கைதாவதற்கு முன்னர் நாமல் கூறிய விடயம்
என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் இன்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

விளக்கமறியல்
தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார்.