அரசியலில் புதிய பரபரப்பு ; சரத் பொன்சேகாவின் கருத்தை ஆதரித்த நாமல் ராஜபக்ஷ

Sri Lanka Army Mahinda Rajapaksa Namal Rajapaksa Sarath Fonseka
By Sahana Feb 21, 2026 05:16 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலைகாரர் அல்ல என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக தெரிவித்துள்ளமை சாதகமான விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு ; 5 மாதங்கள் கழித்து மீண்டும் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு ; 5 மாதங்கள் கழித்து மீண்டும் அதிரடி நடவடிக்கை

சரத் பொன்சேகாவின் அண்மைக்காலக் கருத்துகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆயுதங்களை கீழே வைத்து சரணடையுமாறு பகிரங்கமாக ஊடகங்கள் வழியாக அழைப்பு விடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ தான் என தெரிவித்தார்.

அரசியலில் புதிய பரபரப்பு ; சரத் பொன்சேகாவின் கருத்தை ஆதரித்த நாமல் ராஜபக்ஷ | Namal Rajapaksa Supports Sarath Fonseka S Opinion

போர்க்கால சூழ்நிலையில் இராணுவத்திடம் சரணடையுமாறு அழைப்பு விடுப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், யுத்தத்தின் போது வழங்கப்பட்ட உத்தரவுகள் தொடர்பில் சரத் பொன்சேகா வெவ்வேறு காலங்களில் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரானவை அல்ல; அவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையே எனவும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் உயிர்தியாகம் செய்துள்ளதாகவும், குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் மற்றும் சொத்துச் சேதங்களுடன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதே மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கமாக இருந்ததாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலில் புதிய பரபரப்பு ; சரத் பொன்சேகாவின் கருத்தை ஆதரித்த நாமல் ராஜபக்ஷ | Namal Rajapaksa Supports Sarath Fonseka S Opinion

சில அரசியல் குழுக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, மஹிந்த ராஜபக்ஷ “இரத்தவெறி கொண்ட கொலையாளி” அல்ல என்பதை தெளிவுபடுத்தியதற்காக சரத் பொன்சேகாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

அழிவை ஏற்படுத்திய ஒருவராக அல்லாமல், நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த தலைவராகவே மஹிந்த ராஜபக்ஷ நினைவுகூரப்பட விரும்புகிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும், யுத்தத்திற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் சாதனைகளாகும் என்றும், நாட்டிற்கு அமைதியும் ஸ்திரத்தன்மையும் உறுதி செய்வதே அவரது முதன்மை இலக்காக இருந்தது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வாகன ஓட்டுநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வாகன ஓட்டுநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US