ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்க்ஷ!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவை நியமிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அதேவேளை , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்டத் தலைவர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகனும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் எம்பி உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாத்தளை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.