நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை (04) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.

சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு
இந்நிலையில், வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.
அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், அதனடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.