அநுர அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள நாமல்
"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது என்று அநுர அரசு குறிப்பிடுகின்றது, அவ்வாறாயின் இந்த அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(8) திங்கட்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் தேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இனவாதம் பரப்பவில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு அரசு மறைமுகமாக இனவாதக் கருத்துக்களைப் பரப்பி விடுகின்றது.
நாங்கள் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடுவது இனவாதமாக அமையாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் தமக்கு நல்லதொரு நிலைப்பாடு இருப்பதாக அரசு குறிப்பிடுகின்றது.
அவ்வாறாயின் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை அரசு பரிசீலிக்க வேண்டும்.