மஹிந்தவின் அரசியலை நொடிப் பொழுதில் அழித்த நாமல்! ரணிலை நோக்கி வரும் மொட்டின் இதழ்கள்
மஹிந்த மிக திட்டமிட்டே அரசியலில் கால் வைத்தார். சந்திரிகாவின் தந்தையான பண்டாரநாயக்கவோடு, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறிய மஹிந்தவின் தந்தையான டி. ஏ. ராசபக்சவினால், சிறிமாவோ குடும்பத்துக்குள் ஊடுருவி, பண்டாரநாயக்க - சிறிமாவோ வாரிசான அநுர பண்டாரநாயக்கவோடு நட்பாகி, அவரை அரசியலில் செல்லாக் காசாக்கி, சந்திரிகா உதவியோடு பிரதமராகி, சந்திரிகாவையே செல்லாக் காசாக்கி ஜனாதிபதியானவர்தான் மஹிந்த ராஜபக்ஷ.
மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் தின்று கொட்டை போட்டவர் என்றால் மிகையாகாது. ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் நண்பர்கள்தான்.
ஆனால் தனது அரசியலுக்கு ஆபத்து வரும் என்றால், நண்பன் அல்ல ஆண்டவனையும் இல்லாதொழிக்க தயங்காதவர் மஹிந்த ராஜபக்ஷ.
அப்படித்தான் புலிகளுக்கு பணம் கொடுத்து, 2005ல் தேர்தலில் ரணிலை தோல்வி அடைய வைத்தார். 2005ல் தேர்தல் கால பேரத்தை புலிகள் முதலில் பேசியது ரணில் தரப்போடுதான்.
புலிகளது தேவையை நிறைவேற்ற பல பணம் படைத்த வியாபாரிகள் முன்வந்த போதும், அது தவறானது என ரணில் நிராகரித்தார்.
இது ரணில் செய்த பெரும் பிழை. சுயநிர்ணய உரிமை போல, நோர்வே ஆதரவோடு தான் புலிகளோடு ஒப்பந்தம் ஒன்றை ஜனாதிபதி சந்திரிகாவை மீறி செய்திருப்பதால், புலிகள் தனக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு சொல்வார்கள் என ரணில் நம்பினார்.
புலிகளது கனவு சுயநிர்ணய உரிமை அல்ல, தனிநாடு. ரணில் ஜனாதிபதியானால், தமிழீழ தாயக கனவு கலைந்து போகும். ரணில் அடிபட மாட்டார், பேச்சு வார்த்தை நடத்தியே போராட்டக் குணத்தை மழுங்கடித்து விடுவார் என நினைத்தனர்.
தமக்கு தேவை சண்டை போடும் ஒருவர். அதற்கு சரியாக பணமும் கொடுத்து, அடிபடக் கூடிய ஒருவராக மஹிந்த ராஜபக்ஷ மாட்டினார்.
பிரபாகரனது பார்வையில் யதார்த்தவாதியாக தெரிந்த மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற வைக்க, தமிழர் வாக்குகளை கடைசி நேரத்தில் பகிஸ்கரிக்க பரப்புரை செய்யப்பட்டது.
அன்றைய நிலையில் இலங்கை தமிழ் வாக்காளர்களில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள், தேர்தலை பகிஸ்கரித்தனர். வடக்கு - கிழக்கில் 0 ஆனது. ரணில் மண் கவ்வினார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார்.
பொல்லு கொடுத்து மண்ணோடு மண்ணானது வரலாறு. இதே மன நிலையில்தான் சில மண்டை சுகமில்லா சில தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அரிப்பில் திரிவதும்.
கடந்த காலத்தை திரும்பி பார்க்காத மோடர்கள். இவர்களை தமிழர்கள் அரசியல் தளத்திலிருந்து ஒதுக்கியே ஆக வேண்டும். அதேபோல மஹிந்த ராஜபக்ஷ என்ன நினைத்தாலும், மஹிந்தவின் கிச்சன் கெபினட்டில் உள்ள மஹிந்தவின் மனைவி சிரந்திக்கு நாமலை ஜனாதிபதியாக்க வேண்டும் எனும் கனவு காரணமாக, அதை மீற மஹிந்தவால் முடியாது. உடல் நிலையும் ஈடு கொடுக்காது.
மகிந்த தரப்பின் பண மோசடி - ஊழல் அத்தனைக்கு பின்னாலும் இருப்போர், மஹிந்தவின் மனைவி மற்றும் பிள்ளைகள்தான்.
மகிந்த இப்போது ஒரு நடமாடும் ஒரு பொம்மை. நாமலின் ஜனாதிபதி கனவுக்கு, ரணில் பச்சை கொடி காட்ட மட்டுமல்ல , நாமலுக்கு ஒரு அமைச்சர் பதவியைக் கூட கொடுக்க ரணில் விரும்பவில்லை.
நாமலின் நெருக்கமான ஆதரவாளர்களையும் ரணில் கண்டு கொள்ளவில்லை. இதனால் ரணிலை வீழ்த்த மொட்டின் ஆதரவை ஜனாதிபதி அபேட்சகராகும் போது கொடுப்பதில்லை என எப்போது முடிவு செய்து விட்டனர்.
சஜித் - அநுர அல்ல எவர் வென்றாலும் ரணிலை தோற்கடிப்பதே நாமல் ஆதரவு குழுவினரது திட்டம். ரணிலுடைய ஆலோசகர்கள் என்போர் தகவல் வழங்குவோர் மட்டும் எனலாம். தானாகத்தான் அவர் சிந்திப்பார். முடிவு எடுப்பார். அதிகம் பேசாமல் செயல்படுவார். வாய் திறப்பது உத்தரவு போட மட்டுமே. சரியானதை ஆதரிப்பார்.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் குடும்ப அரசியலில் சிக்கி இருந்தோருக்கு, ரணில் வித்தியாசமாக தென்பட்டார். ஐதேகவினரை விட மொட்டுக்காரர்கள் ரணிலேடு நெருங்கிவிட்டனர்.
அதனால்தான் நாமலை விட்டு பெரும்பாலானோர் நொடிப் பொழுதில் விலகி விட்டனர். பொதுவாக இப்படி நடக்காது. ரணிலின் தந்தை எட்மண்ட் விக்கிரமசிங்க ஒரு இடதுசாரி.
தவிர விக்கிரமசிங்க குலமானது யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரச வம்சத்தின் பின்னணியை கொண்டது என அண்மையில் ஒரு சிங்கள அறிஞர் சொன்னார்.
எது எப்படியோ மஹிந்த - பசில் உருவாக்கிய மொட்டின் இதழ்கள் ரணிலை நோக்கி வந்து கொண்டுள்ளன. நாமலின் கனவு கரைந்து விட்டது. என குறித்த பதிவை முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.