ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்கும் மற்றுமொரு முக்கிய அமைச்சர்!
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் அணைக்குழு அதிகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
I pledge my support to President @RW_UNP for the upcoming Presidential election. The majority of the SLPP Parliament group will also extend their support to the President to continue the reforms & policy’s towards greater economic stability and the betterment of the country.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 30, 2024
இது தொடர்பில் இன்றையதினம் (30-07-2024) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், அதிக பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளைத் தொடர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்குவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.