நாமல் ராஜபக்ச வழக்கு ; இந்திய சாட்சிகள் இருவருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலதிக விசாரணை
நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த இரு இந்திய சாட்சிகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொடவினால் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளன.