தைப்பூச திருநாளில் திருமஞ்சத்தில் அருட்காட்சி தந்த நல்லூரான்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருநாள் சிறப்பு வழிபாடுகள் நேற்று (01) மிக சிறப்பாக நடைபெற்றது.
மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, வள்ளி தெய்வானை சமேதரராய் வேல் பெருமான் திருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

பெருமஞ்ச வீதியுலா
தைப்பூச தின உலக பெருமஞ்ச வீதியுலாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பெரும்பாலானவர்கள் மஞ்ச திருவிழாவில் கலந்து கொண்டனர்.

இதே வேளை இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் நடைபெற்றது.

மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, ஆறுமுகசுவாமி , வள்ளி தெய்வானை சமேதரராய் , உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.