யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா ; வெளியான அறிவிப்பு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள்
யாழ் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.
குறிப்பாக குறித்த காலத்திற்குள் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து , வியாபார நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள், ட்ரோன் கமராக்கள் என்பன தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதிநிதிகள், அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர், யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய மகோற்சப விசேட தினங்கள் தொடர்பில் ஆலய பரிபாலன சமையும் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
