நல்லூர் தேர்த்திருவிழா; பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; மாணவர்கள் மகிழ்ச்சி!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ். நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் புதன்கிழமை (09) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு தேர் திருவிழாவான புதன்கிழமை அன்று, விசேட விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.