நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி அறிவிப்பு
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் பகுதிகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு
மேலும் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.