வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சி; சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கப்பம் கோரிய இளம் ஜோடி
மசாஜ் நிலையத்திற்குச் சென்ற வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சிகளைத் திருட்டுத்தனமாகப் படம் பிடித்து, ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு தெற்குப் பிராந்தியக் குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் கண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவருமாவர்.

மசாஜ் நிலையத்திற்குச் சென்ற வர்த்தகர்
சந்தேக நபரான பெண், குறித்த வர்த்தகரின் நிர்வாணக் காட்சிகளை அவரது வாட்ஸ்-அப் இலக்கத்திற்கு அனுப்பி, அந்த வீடியோக்களைச் சமூக ஊடகங்களிலும் அவரது மனைவியிடமும் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதன்போது, சுமார் 1,50,000 ரூபாவை வர்த்தகரிடம் பெற்று சந்தேக நபர் தனது வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட வர்த்தகர், கொழும்பு தெற்குப் பிராந்தியக் குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, தலாங்கம பகுதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் வைத்து சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.