நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று(22) புதுப் பொழிவுடன் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
83 பயணிகளுடன் காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது, இலங்கையின் காங்கேசன்துறைக்கு வந்தடைந்தயவுள்ளது.
பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது.
பயணிகள் கப்பல் சேவை
மேலும் பயணிகள் கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என்பதுடன், www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காலநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டதுடன் , தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டமையும் குறிப்பிடதக்கது.