பிரேத பரிசோதனையில் மர்மம் ; திடீரென மயங்கி விழுந்த 11 வயது மாணவி உயிரிழப்பு
அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணை
பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவி, பேருந்தில் ஏற முற்பட்ட போதே மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவியுடன், அவர் கெக்கிராவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், தொடர்ந்த சிகிச்சையிலேயே உயிரிழந்தார்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.
எனவே, உடல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக பரிசோதகரிடம் அனுப்பப்பட்டுள்ளன.
மரண விசாரணை 'திறந்த தீர்ப்பு' என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், சிறுமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.