யாழில் திடீரென இடம்பெற்ற பயங்கர சம்பவம்: இருவருக்கு நேர்ந்த விபரீதம்
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் இருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (13-11-2022) காலை கோப்பாய் கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது.
நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமொன்று மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதான பணியில் ஈடுபடும்போது மர்மப்பொருளொன்று வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவ தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் காயமடைந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பகுதியில் புல்லு வெட்டும் பணியில் ஈடுபடுவதாகவும் இன்றைய தினம் வழமை போல் தாங்கள் மரம் நடுவதற்காக புல்லு வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென மர்மப் பொருள் வெடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பான தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.