தமிழர் பகுதியில் இரவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு மர்ம நபர் செய்த சம்பவம்
மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளார்.

இதன்போது, குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளார்.
எனினும், சங்கிலியை முழுமையாக பறிக்க முடியாத நிலையில், குறித்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.