குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சித்திரவதை செய்த மர்ம கும்பல்! அச்சத்தில் மக்கள்
திருகோணமலை மர்ம கும்பல் ஒன்று நபரொருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (23) சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெறுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, திருகோணமலை முகமதியநகர் – மட்கோ பகுதியில் உள்ள வெதுப்பகத்தில் குறித்த நபர் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், இனம் தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இனம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட குடும்பஸ்தர், சித்திரைவதை உட்படுத்தும் போது, அதனை அவதானித்த மட்கோ போதை ஒழிப்பு குழுவினரால் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் இலிங்கநகரைச் சேர்ந்த ஐவரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, நீதிமன்றுறில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இனம் தெரியாத கும்பலால் சித்திரைவதைக் குள்ளான நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
எனினும், மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.