வவவுனியாவில் நல்லின மாடுகள் மர்ம சாவு
வவவுனியா புதிய சின்னக் குளம் பகுதியில் மர்மமான முறையில் பலியான நல்லினமாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த காலனடை வளர்ப்பாளரின் மூன்று பசு மற்றும் ஒரு நாம்பன் மாடு மேய்ச்சலுக்காக சென்ற நிலையில் காணாமல் போகியுள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினம் வயலுக்கு சென்ற விவசாயிகளால் மர்மமான முறையில் பழையன மாடவுகளை கண்டுள்ளனர்.
இதனையடுத்து மாடுகளின் உரிமையாளரால் மாமடு காவற்துறையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாடுகள் வேட்டைக்காக பயன்படுத்தப்படும் சட்ட விரோத மின்சார இணைப்பில் அகப்பட்டு இறந்திருக்கலாம் என்ற நிலையில் மாமடு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.