தமிழக முகாமில் ஈழப் பெண்ணின் ஆசை ; இயக்குநர் மிக்ஷ்கின் அறிவிப்பால் அதிர்ந்த இசை அரங்கம்!
தமிழக முகாமில் 30 வருடங்களாக வாழ்ந்து வரும் ஈழத்தை சேர்ந்த தம்பதிகளின் மகளின் கல்வி செலவை இயக்குநர் மிக்ஷ்கின் ஏற்பதாக கூறியுள்ளமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி பாடல் போட்டியில் கலந்துகொண்ட ஈழததை பின் புலமாக கொண்ட மாணவிக்கே இயக்குநர் மிக்ஷ்கின் உதவ முன்வந்துள்ளார்.
மருத்துவராக வரவேண்டும்
குறித்த மாணவியின் பெற்றோர் இலங்கையில் இடம்பெற்ற உளநாட்டு போரில் தமிழகத்தில் தஞ்சமடைந்த நிலையில் 30 வருடங்களாக தமிழக அதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.
தனது மகளுக்கு மருத்துவராக வரவேண்டும் என்பதே அவரின் ஆசை என கூறிய யுவதியின் தந்தை, தனது சூழ்நிலையால் மகளின் விருப்பத்தை நிறவேற்ற முடியாத சூழலில் உள்ளதாக கூறுகின்றார்.
இந்நிலையில் இசைப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் மிக்ஷ்கின் , யுவதியின் படிப்பு செலவை தானே ஏற்பதாக கூறியுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.