மியன்மார் நிலை நாளை இலங்கைக்கும் வந்துவிடக் கூடாது! கரு ஜெயசூரிய
மியன்மாரின் ஜனநாயக விரோத இராணுவ அடக்குமுறையில் அந்நாட்டு இளைஞர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அதிகார மோகமே இதற்கான காரணமாகும், இந்த நிலைமை நாளை இலங்கைக்கும் வந்துவிடக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது அரசியல் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது, இவ்வாறான நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் நிகழ்கால செயற்பாடுகள், மாகாண சபை தேர்தலுக்கான நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்
அவர் மேலும் கூறுகையில்,
இன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன.
சுயாதீனம் என்ற பெயரில் மறைமுகமான அரசியல் அதிகாரம் என்ற இயங்கிக் கொண்டிருக்கிறது, அதிகார மோகத்தில் செயற்படும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களின் நோக்கங்களுக்கு இடமளிக்க கூடாது.
நீதிமன்ற சுயாதீனம் கூட இன்று பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது. இது நாட்டின் சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்தும்.